மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

ரிலாக்ஸ் டைம்: ஏ பி சி அல்வா!

ரிலாக்ஸ் டைம்: ஏ பி சி அல்வா!

இனிப்பு வகைகள் அனைவருக்கும் பிடித்தவை என்றாலும் அதை சத்துள்ளதாகவும் வித்தியாசமாகவும் வீட்டிலேயே செய்யும்போது ஆரோக்கியமும் அதிகரிக்கும். அதற்கு இந்த ஏ பி சி அல்வா உதவும்.

எப்படிச் செய்வது?

ஒரு ஆப்பிளின் தோலைச்சீவி அரைத்துவைக்கவும். பத்து அக்ரூட்டை உடைத்து அதன் உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து ஊறவைத்து தோல் நீக்கி அரைக்கவும். பத்து பாதாம்பருப்பை வெந்நீரில் ஊறவைத்து தோல்நீக்கி அத்துடன் பத்து முந்திரிப்பருப்பு சேர்த்து அரைக்கவும். ஒரு கப் அளவுக்கு பீட்ரூட், கேரட்டை தோல் சீவி துருவி இட்லி பானையில் (ஆவியில்) வேக வைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

கனமான வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய்விட்டு சிறிதளவு முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும். அதே நெய்யில் அரைத்த விழுதுகள் அனைத்தையும் வதக்கி இரண்டரை கப் சர்க்கரை சேர்த்துக்கிளறவும். அல்வா பதம் வந்ததும் நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி வறுத்த முந்திரியால் அலங்கரிக்கவும்.

சிறப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 19 மா 2021