மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

கொலை வழக்கில் தூக்குத் தண்டனை ரத்து!

கொலை வழக்கில் தூக்குத் தண்டனை ரத்து!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, அசோக்குமார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அசோக்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் அசோக்குமாருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நேற்று(மார்ச் 18) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் அமர்வு விசாரித்தது. அப்போது, ”சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட துணியில் இருந்த ரத்தக் கறையும், அசோக்குமாரின் ரத்தமும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், துணியில் இருந்த ரத்த மாதிரி வேறு ஆணின் உடையது, அசோக்குமார் உடையது அல்ல என மரபணு பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. அந்த அறிக்கை விசாரணை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை. அரசுத் தரப்பு சாட்சியங்களும், ஆதாரங்களும் அசோக்குமார் தான் குற்றவாளி என்பதை முழுமையாக நிரூபிக்கவில்லை.

இந்த வழக்கை முறையாக விசாரிக்காதது, வருத்தம் அளிக்கிறது. அசோக்குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, உறுதி செய்ய முடியவில்லை. அதனால், அசோக்குமாருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கின் புலன் விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், இந்த குறைபாடுகளுக்கான காரணம் குறித்து விசாரித்து, அதற்கு சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வினிதா

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

வெள்ளி 19 மா 2021