மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

தற்போது கிராம சபைக் கூட்டங்களை நடத்துவது சரியல்ல!

தற்போது கிராம  சபைக் கூட்டங்களை நடத்துவது சரியல்ல!

கொரோனா பரவல் அதிகரித்து வருகிற நிலையில், கிராம சபைக் கூட்டங்களை நடத்துவது சரியாக இருக்காது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, ஆண்டுக்கு ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மற்றும் அக்டோபர் 2ஆம் தேதி நடத்த வேண்டிய கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீண்டும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த உத்தரவிடக் கோரி திமுக தரப்பில் முதன்மை செயலாளர் கே.என்.நேருவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுச் செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நேற்று (மார்ச் 18) தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் கிராம சபை கூட்டங்களை நடத்துவது சரியாக இருக்காது எனத் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் இரண்டாம் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வெள்ளி 19 மா 2021