மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்!

ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக முன்னாள் சிறப்பு டிஜிபி நேற்றிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் பாதுகாப்புப் பணிக்குச் சென்றுவிட்டு திரும்பிய தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து பெண் ஐபிஎஸ் அதிகாரி, டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்ததின்படி, சிறப்பு டிஜிபி கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

இந்த விவகாரத்தில் புகார் அளிக்க சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை மறித்து மிரட்டல் விடுத்த செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக இரண்டு ஐஜிக்கள், இரண்டு டிஐஜிக்கள், நான்கு எஸ்பிக்கள் ஆகியோர் உள்பட 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிறப்பு டிஜிபியிடம் 5 மணி நேரமும், கண்ணனிடம் 2 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கின் முழு விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை சிபிசிஐடி சீலிடப்பட்ட கவரில் மார்ச் 16ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அப்போது, பாலியல் புகார் கொடுக்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்து நிறுத்திய எஸ்பியை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட சிறப்பு டிஜிபியை இதுவரை ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பெண் எஸ்பி கொடுத்த பாலியல் புகாருக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்றிரவு சிறப்பு டிஜிபியை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 19 மா 2021