jதடுப்பூசி போட தற்காலிக மருத்துவமனைகள்!

public

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கொரோனா தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை,

கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த தற்காலிக மருத்துவமனைகள் அமைக்க வேண்டும். மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும்.

தற்போது 761 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட விருப்பம் தெரிவிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தடுப்பூசி மருந்துகள் வீணாகாமல் தடுக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசி பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா RT-PCR பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.

கோவிட் கவனிப்பு மையங்களில் தேவையான மருத்துவர், செவிலியர்களை நியமிக்க வேண்டும்.

ஒரு தெருவில் மூன்று பேருக்கு மேல் நோய் தொற்று இருந்தால், நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, அங்கே உள்ளவர்களுக்கும், வெளியில் இருந்து உள்ளே வருபவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஏற்கனவே கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அந்தந்த மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

**வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *