மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 மா 2021

மாட்டுவண்டியில் சென்ற மாவட்ட ஆட்சியர்!

மாட்டுவண்டியில் சென்ற மாவட்ட ஆட்சியர்!

விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாட்டு வண்டியில் சென்று வாக்காளர்களுக்கு ஆட்சியர் கண்ணன் அழைப்பிதழ் வழங்கி பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டுவதற்காக நாள்தோறும் வாக்காளர்களைக் கவரும் வகையில் அரசுத்துறை மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வத்திராயிருப்பு புதிய பஸ் ஸ்டாண்டில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி அடங்கிய பதாகைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வாக்குப்பதிவு எந்திரத்தில் வருகிற தேர்தலில் வாக்காளர்கள் குழப்பமின்றி தெளிவாக வாக்களிக்கும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேர்தல் விழிப்புணர்வு வரைபட காட்சி மையத்தை கலெக்டர் கண்ணன் திறந்து வைத்து, வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக மகளிர் சுய உதவிக்குழுவினால் வரையப்பட்ட வரைபடங்களைப் பார்வையிட்டார். தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு மனிதவள விளம்பர மையத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

மகளிர் சுய உதவிக்குழுவை சார்ந்த பெண்கள் தேர்தல் ராக்கியை அணிவித்தனர். 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஓவியங்களை மெகந்தி மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்கள் கைகளில் வரைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மகளிர் திட்டம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டுவண்டி பேரணியை தொடங்கி வைத்து 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி மாட்டுவண்டியில் சென்று கலெக்டர் கண்ணன் வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்து, தவறாமல் வாக்களிக்க வருமாறு அழைப்பிதழ் வழங்கினார்.

இந்தவித்தியாசமான நிகழ்ச்சியை வாக்காளர்கள் பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு கண்டிப்பாக வாக்களிப்பதாகவும் பிறரையும் வாக்களிக்க வலியுறுத்துவதாக உறுதி கூறினர்.

சக்தி பரமசிவன்

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

வியாழன் 18 மா 2021