மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 மா 2021

பள்ளிகளைக் குறிவைக்கும் கொரோனா!

பள்ளிகளைக் குறிவைக்கும் கொரோனா!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சென்னையில் 395 பேருக்கும், கோவையில் 307 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 17 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு பணிபுரியும் நான்கு பெண் ஆசிரியர்கள், இரண்டு ஆண் ஆசிரியர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததையடுத்து அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆறு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆசிரியருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியர் வகுப்பெடுத்த வகுப்பில் உள்ள 80 மாணவிகளுக்கும் வரும் திங்கட்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 11ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்தப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய திலிப் காந்திக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதைத் தொடர்ந்து டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மூச்சுத் திணறலால் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 18 மா 2021