மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

24 வார கருக்கலைப்புக்கு ஒப்புதல்!

24 வார கருக்கலைப்புக்கு ஒப்புதல்!

கருவை கலைப்பதற்கான கால அவகாசத்தை 20 வாரத்திலிருந்து 24 வாரங்களாக உயர்த்தும் சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

20 வார கால கருவை கலைக்க மருத்துவ கருக்கலைப்புச் சட்டம் தடை விதிக்கிறது. ஆனால், கர்ப்பத்தினால் தாய் அல்லது சேயின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என மருத்துவர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தால், கருவை கலைக்க அனுமதி அளிக்கப்படும்.

இந்நிலையில், 24 வாரங்கள் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள், சிறுமிகள் ஆகியோர் 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மக்களவையில் இதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நேற்று(மார்ச் 16) மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த பின் இந்த சட்டம் அமலுக்கு வரும்.

இந்த மசோதாவை தாக்கல் செய்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன் கூறுகையில், உலகளவில் மேற்கொள்ளப்படும் முறைகள் ஆராயப்பட்டு மற்ற நாடுகளிடம் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்ட பின்னரே இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில், பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த சட்டத்தையும் நிறைவேற்ற மாட்டோம். பெண்களின் பாதுகாப்பும் கண்ணியமும் காக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

புதன் 17 மா 2021