மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

திருச்சூர் பூரம் விழாவுக்கு அனுமதி!

திருச்சூர் பூரம் விழாவுக்கு அனுமதி!

கொரோனா தொற்றுக்கு மத்தியில், கேரளாவில் உள்ள அனைத்து கோயில் திருவிழாக்களின் தாயாகக் கருதப்படும் திருச்சூர் பூரம் விழாவுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயிலில் பூரம் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழாவில், திருச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட கோயில்கள் கலந்து கொள்ளும்.

திருச்சூர் பூரம் திருவிழாவில் செண்டை, மத்தாளம், எடக்கா, திமிலா மற்றும் கொம்பு உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகள் இசைக்கப்படும். யானைகள் அணிவகுப்பு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் அதிகமானோர் கலந்து கொள்வது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த ஆண்டு பூரம் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் இந்த திருவிழா நடத்தப்படமாட்டாது என்று கூறப்பட்டது. ஆனால் பூரம் திருவிழாவை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்க கேரள தலைமை செயலாளர் ஜோயி தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா நிபந்தனைகளுடன் பூரம் திருவிழாவை ஏப்ரல் 23ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான இலஞ்சிதாரா மேள வாத்தியம் இசைக்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை. ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் பூரம் கண்காட்சிக்கு 35,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி மே மாதம் வரை அதே இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். இந்த திருவிழாவில் அமைக்கப்படும் கடைகளின் எண்ணிக்கை இந்தாண்டு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் 5 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி திருவிழா நடைபெற வேண்டும். இ-டிக்கெட் மூலம் மக்களை அனுமதிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 17 மா 2021