மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

கொரோனா: பள்ளிகளுக்கு உத்தரவு!

கொரோனா: பள்ளிகளுக்கு உத்தரவு!

பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

குறைந்து கொண்டிருந்த கொரோனா பரவல், கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தஞ்சையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

வகுப்பறைகள், கழிப்பிடம், தண்ணீர் குழாய்கள் இருக்குமிடம் என மாணவர்கள் கூடும் இடங்களில் தினமும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.

கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கக் கூடாது. அதுபோன்று அறிகுறி உள்ள ஆசிரியர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்.

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 17 மா 2021