மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

டிஜிபி மீதான பாலியல் புகார்: விசாரணை அறிக்கை தாக்கல்!

டிஜிபி மீதான பாலியல் புகார்: விசாரணை அறிக்கை தாக்கல்!

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து இந்த வழக்கு விசாரணையை கண்காணித்து வருகிறார்.

இந்த விவகாரத்தில், சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். செங்கல்பட்டு எஸ்பியாக இருந்த கண்ணன், பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க செல்லவிடாமல் தடுத்து அத்துமீறியதற்காக அவர், மீது கொலை மிரட்டல், முறையற்ற தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக, சிறப்பு டிஜிபியிடம் 5 மணி நேரமும், எஸ்பியாக இருந்த கண்ணனிடம் 2 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று(மார்ச் 16) மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் ஐபிஎஸ் அளித்த பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட டிஜிபி, எஸ்பி உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தலைமையில் நடத்தப்பட்ட விசாரணை உள்ளிட்ட முழு விசாரணையின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

இதையடுத்து, வழக்கு விசாரணை 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அடுத்தகட்ட விசாரணையின்போது இரண்டாம் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

வினிதா

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

செவ்வாய் 16 மா 2021