மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

அதிகரிக்கும் கொரோனா: அரசின் உத்தரவுகள்!

அதிகரிக்கும் கொரோனா: அரசின் உத்தரவுகள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பொதுஇடங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று(மார்ச் 16) காலை11 மணிக்கு காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினர்.

அதில், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது, நோய் தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளாதது, வங்கிகள், பள்ளிகள் போன்ற இடங்களில் நோய் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றாதது போன்றவைகள்தான் கொரோனா தொற்று பரவுவதற்கு காரணங்களாக இருக்கிறது என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,

பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதையும், அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை நிறுவனங்கள் கடைபிடிப்பதையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத் துறை, காவல் துறை கண்காணிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வேண்டும்.

அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில், கிருமி நாசினி உள்ளதா, மக்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறதா என்பது உறுதிபடுத்த வேண்டும்.

நோய் தொற்று உள்ள இடங்களிலும், பொதுக் குழாய் மற்றும் பொது கழிப்பிடம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மேற்சொன்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என சம்பந்தப்பட்ட அரசு துறைகள் கண்காணிக்க வேண்டும்.

நோய் தொற்று ஏற்படும் பகுதிகளில் உரிய அலுவலர்களை நியமித்து நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். காய்ச்சல் முகாம்களை அதிகளவு நடத்தி, நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை கடந்த ஆண்டு போல் காண்காணிக்க வேண்டும்.

தகுதிவாய்ந்த நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் அதிகமாக கூடும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள், கலாச்சார, வழிப்பாட்டு மற்றும் பிற கூட்டங்களுக்கு பொது மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.

தேர்தல் பணிகளுடன் கொரோனா தடுப்பு பணிகளையும் ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 16 மா 2021