மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

பாதாள சாக்கடை மரணங்களுக்கு மாநகராட்சியே பொறுப்பு!

பாதாள சாக்கடை மரணங்களுக்கு மாநகராட்சியே பொறுப்பு!

பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது ஏற்படும் மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாதாளச் சாக்கடை, கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுவதைத் தடை செய்யவும், பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

கடந்த 10ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையின்போது, பாதாள சாக்கடைகளைச் சுத்தம் செய்ய மனிதர்களைப் பணியமர்த்தும் பணியை ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்கிறதா? என அறிக்கை அளிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று(மார்ச் 16) மீண்டும் இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, பல்வேறு மாநகராட்சி, நகராட்சிகளிடம் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும், அந்த விவரங்களைத் தொகுத்து அறிக்கையாகத் தாக்கல்செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பாதாள சாக்கடைகளைச் சுத்தம் செய்யும்போது ஏற்படும் மரணங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் மீது குற்ற வழக்குப் பதிவுசெய்து, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், மரண சம்பவங்கள் தொடர்பான வழக்குகளின் புலன் விசாரணையை துரிதப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கியதை உறுதிசெய்யவும், அது குறித்த அறிக்கைத் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

செவ்வாய் 16 மா 2021