மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

பள்ளிகள் மூடப்படாது!

பள்ளிகள் மூடப்படாது!

ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு அனைத்து பள்ளிகளும், குறிப்பாக 9, 10, 11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் கிடையாது என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இன்று(மார்ச் 16)பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் கூறுகையில்,” கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஜனவரி மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. மே 3 ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்கவுள்ளது. கொரோனாவால் பாடங்களை நடத்த முடியாததால், பாடத் திட்டங்களை குறைத்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 9, 10, 11 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை. இதுகுறித்து பரவும் தகவல்களை மாணவர்கள், பெற்றோர்கள் நம்ப வேண்டாம். தேர்தல் நாளான ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று பொதுவிடுமுறை அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து, பள்ளிகள் தொடர்ந்து இயங்கும். பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு, அதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

செவ்வாய் 16 மா 2021