மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: ஊரடங்கா?

ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: ஊரடங்கா?

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, நாளை பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், இன்று(மார்ச் 16) காலை தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500க்கு கீழ் இருந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 66 நாட்களுக்குப் பின்னர் நேற்று மீண்டும் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, நாகப்பட்டினத்தில் தலா ஒருவர் வீதம் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் தென்மாவட்டங்களில் மாணவர்களிடையே பரவும் கொரோனா தொற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே சேதுராபட்டி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இதையடுத்து, 250பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 15 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடா்ந்து, மாணவிகளின் பெற்றோர் 5 பேருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளில் 56 பேருக்கும், ஒரு ஆசிரியைக்கும் கொரோனா தொற்று இருப்பது மார்ச் 13, 14 ஆம் தேதிகளில் தெரிய வந்தது. இதையடுத்து பள்ளி மாணவிகள் வசிக்கும் அம்மாபேட்டை வட்டாரத்துக்கு உள்பட்ட 24 கிராமங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என சுமார் 350 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் மாணவிகளின் பெற்றோர் 9 பேருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் , சிகிச்சை பெற்று வருகின்றனா். மீதமுள்ளவர்களுக்கு சில நாட்களில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், மதுக்கூர் அருகே ஆலந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆய்வக பெண் என கொரோனா பரவல் பட்டியல் நீள துவங்கியுள்ளது.

ஊட்டி கொடைக்கானல் என தமிழக கோடை வாசஸ்தலங்களுக்கு வரும் கேரளா சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக களியக்காவிளை, ஆரியங்காவு குமுளி கூடலூர் போடிமெட்டு என தமிழக கேரளா எல்லையில் தமிழக அரசு இ-பாஸ் முறையை தீவிரமாக அமுல்படுத்தினாலும் கேரளா தமிழகம் இடையே இயங்கும் சிறப்பு ரயில்களில் பயணிப்போரால் கொரோனா அதிகம் பரவுவதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

ரயில்களில் ஆரம்பத்தில் கொரோனா விதிமுறைகள் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டநிலையில் தற்போது சர்வசாதாரணமாக கேரளா தமிழக பயணிகள் இருமாநிலத்திற்குள்ளும் பயணிக்கின்றனர்.ரயில் பயணிகளை மீண்டும் தீவிரமாக கண்காணிப்பு செய்து பயணிக்க அனுமதிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் திருச்சி அரசுமருத்துவமனையில் இன்று ஆய்வு செய்த மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மீண்டும் கொரோனா இரண்டாவது அலை பரவ அதிக வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார் .

இதனால், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தபடுமா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

_சக்தி பரமசிவன்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

செவ்வாய் 16 மா 2021