மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

ரிலாக்ஸ் டைம்: கார்ன் அல்வா!

ரிலாக்ஸ் டைம்: கார்ன் அல்வா!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சோளத்தில் அல்வா செய்து சாப்பிடுவது சுவையை மட்டுமல்ல... புத்துணர்ச்சியையும் தரும். இன்றைய ரிலாக்ஸ் டைமுக்கு இதமளிக்கும்.

எப்படிச் செய்வது?

செய்முறை: ஒரு கப் சோள முத்துகளைச் சிறிது நெய்விட்டுச் சிவக்க வறுக்கவும். அரை லிட்டர் பாலை நீர் சேர்க்காமல் காய்ச்சி இரண்டு கப் சர்க்கரை சேர்த்துக் கலக்கி ஆறவைக்கவும். ஆறிய சோளம், ஐந்து முந்திரி, ஐந்து பாதாம், இரண்டு டீஸ்பூன் கசகசா, அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள், சிறிதளவு பால் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை சர்க்கரை சேர்த்த பாலில் நன்கு கலக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, 50 கிராம் நெய் ஊற்றிக் காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்த பாலை ஊற்றிக் கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். தலா ஐந்து முந்திரி, பாதாமைச் சிறிதளவு நெய்யில் பொன்னிறமாக வறுத்து, அல்வாவில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

சிறப்பு

உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு மற்றும் நார் சத்துக்கள் நிறைந்த சோளம் அனைவருக்கும் ஏற்றது.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

செவ்வாய் 16 மா 2021