மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச்17) ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டிசம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து தற்போதுவரை கொரோனா தொற்று 33% அதிகரித்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பில், 85% மகாராஷ்டிரம், தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்களில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 800க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அதிகரிப்பால் நாக்பூரில் மீண்டும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை (மார்ச் 17) பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். நாளை மதியம் 12.30 மணியளவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதால், அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பூசிகள் செலுத்துப்படுவதின் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் ஆரம்பித்ததிலிருந்து இதுபோன்று பல்வேறு ஆலோசனை கூட்டங்களை பிரதமர் மோடி நடத்தியுள்ளார். கடைசியாக, கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் ஜனவரி மாதத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 16 மா 2021