மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் வதக்கல்!

கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் வதக்கல்!

எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பாகாத உணவு பிரியாணி. ஆனால், பிரியாணிக்கு ஒரே விதமான வெங்காய ரைத்தா, கத்திரிகாய்க் கொத்சுதான் சைடிஷாக இருக்கிறதே என்று நினைப்பவர்கள் இந்த கத்திரிக்காய் வதக்கல் செய்து பிரியாணிக்குத் தொட்டுக்கொள்ளலாம்... தனி ருசியை அனுபவிக்கலாம்.

என்ன தேவை?

கத்திரிக்காய் - 5 (நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்)

மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

எண்ணெய் - 6 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு மூடி போட்டுக் குறைந்த தீயில் ௭ட்டு நிமிடங்கள் நன்றாக வேகவிடவும். நடுநடுவே திறந்து கிளறிவிடவும். (இல்லையெனில் கருகிப்போய்விடும்). நன்றாகச் சுருள வதங்கியதும் இறக்கிப் பரிமாறவும்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 16 மா 2021