மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

கட்சி சின்னங்களில் முகக்கவசம்

கட்சி சின்னங்களில் முகக்கவசம்

கேரளாவில் வரும் ஏப்ரல் 6ல் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சியினரும் கூட்டணி அமைத்தும், வேட்பாளரை அறிவித்தும், முழுவீச்சில் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். வாக்காளர்களை கவருவதற்கு வித்தியாசமாக என்ன செய்யலாம் என்றும் யோசித்து வருகிறார்கள்.

தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் பிரச்சாரத்திற்கு செல்லும் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதால் பிரச்சாரத்திற்கு செல்வோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து அனைத்து கட்சியினரும் தங்கள் கட்சிகளின் சின்னங்கள் வரையப்பட்டுள்ள முகக்கவசங்களை அணிந்தபடியே அவர்கள் வாக்குகேட்க செல்கிறார்கள்.

இதனால் கேரளாவில் முகக்கவசம் தயாரிப்போர் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்கள் காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் சின்னங்களுடன் கூடிய முகக்கவசங்களை தயாரிக்கின்றனர். தினமும் தயாராகும் முகக்கவசங்கள் வேகமாக விற்பனை ஆவதாக முகக்கவச தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்று தமிழகத்திலும் கட்சி சின்னங்களில் முகக்கவசம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

_சக்தி பரமசிவன்

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

திங்கள் 15 மா 2021