மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

அமர்நாத் யாத்திரை: ஏப்ரல் 1 முதல் முன்பதிவு

அமர்நாத் யாத்திரை: ஏப்ரல் 1 முதல் முன்பதிவு

2021 ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 28ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப்பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த 2021 ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோயில் வாரியக் குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு நேற்று (மார்ச் 14) விவாதித்தது.

இதில் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூன் 28ஆம் தேதி தொடங்குவது என்றும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 21ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை 15 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பயண நாட்கள் குறைக்கப்பட்டன. சாதுக்களைத் தவிர்த்து 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் அந்த யாத்திரையில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

மேலும், “யாத்திரையில் பங்கேற்கும் அனைத்து மக்களும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் வந்தபின் அதற்குரிய சான்றிதழை வழங்கிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் யாத்திரை செல்லும் வழியிலும் சோதனை நடத்தப்படும். அப்போது கொரோனா அறிகுறிகள் இருந்தால் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். சாதுக்களைத் தவிர்த்து அனைத்து பக்தர்களும் யாத்திரைக்கான ஆன்லைனில் தங்களை முன்பதிவு செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.

இந்த 2021 ஆண்டுக்கான அமர்நாத் தரிசனம் முடிவடையும் நாள் குறித்தும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமர்நாத் பனிலிங்கத்தை சராசரியாக ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை குறையும் என்றே தெரிகிறது.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

திங்கள் 15 மா 2021