மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

ஆதாரங்களைக் காட்டினால் பணம் திரும்ப வழங்கப்படும்!

ஆதாரங்களைக் காட்டினால் பணம் திரும்ப வழங்கப்படும்!

உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களுக்கான ஆதாரங்களைக் காட்டினால் அவை திரும்ப வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை தேர்தல் ஆணையரகத்தில் இன்று(மார்ச் 15) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மார்ச்12 ஆம் தேதி முதல் இன்று மதியம் வரை 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில், 58 ஆண் வேட்பாளர்கள், ஒருவர் பெண் வேட்பாளர். வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் செலவினங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.109.45 கோடி ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், 53 கோடியே 67 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், 65 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, புடவைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களும் அடங்கும்.

ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களுக்கான ஆதாரங்களைக் காட்டினால், குறிப்பிட்ட காலத்துக்குள் அவை திரும்ப வழங்கப்படும்.

மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை 1 லட்சத்து 46 ஆயிரத்து 16 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது வரை தேர்தல் தொடர்பாக 1120 புகார்கள் பதிவாகின. அவற்றில் தகுதியுள்ள 695 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க சி.விஜில் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த செயலி மூலம் தேர்தல் முறைகேடுகள், தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து அனுப்பினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயலி மூலம் புகார் தெரிவிப்பவர்கள் தெளிவான புகைப்படத்தை எடுத்து அனுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

திங்கள் 15 மா 2021