மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

பிரச்சாரத்துக்கு எந்த வாகனம் பயன்படுத்த வேண்டும்?

பிரச்சாரத்துக்கு எந்த வாகனம் பயன்படுத்த வேண்டும்?

பதிவெண் பெறப்படாத வாகனங்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினால் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார்.

தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெற தொடங்கியதையடுத்து, அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனம் குறித்து போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் இன்று(மார்ச் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேர்தல் பிரச்சாரத்துக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, பதிவு எண் பொருத்தப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத வாகனங்களை பயன்படுத்தினால், வாகன உரிமையாளர், விற்பனையாளர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமில்லாமல், பதிவெண் பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், நீதிமன்றத்தால் அபராதமும் விதிக்கப்படும் என்றும், வாகன விற்பனையாளர்கள் வணிக சான்று தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டத்திற்கோ அல்லது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கோ பொதுமக்களை அழைத்துவர, அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக, சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே, எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

திங்கள் 15 மா 2021