மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கு உத்தரவு!

சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கு உத்தரவு!

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டுமென்று நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தொழிலாளர் ஆணையம் இன்று(மார்ச் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல், மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது.

1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 135Bன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

மேலும் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமல் இருக்கவேண்டும் என நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

திங்கள் 15 மா 2021