மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

மகன் இழப்பை தாங்காத தந்தையும் தற்கொலை!

மகன் இழப்பை தாங்காத தந்தையும் தற்கொலை!

மயிலாடுதுறை அருகே குளத்தில் தவறி விழுந்து மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் சிறுவனின் தந்தையும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழகத்தில் மழைபெய்து ஏரி கண்மாய்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கல்விநிலையங்கள் செயல்படாத நிலையில் வீட்டில் பொழுதுபோகாத மாணவர்கள் கூட்டாக கண்மாய்களில் குளிக்க, மீன்பிடிக்க செல்லும் போது தவறி விழுந்து மரணம் சம்பவிக்கிறது.. நேற்று திண்டுக்கல் அருகே கண்மாயில் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவர்கள் உட்பட ஐவர் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்த துயரம் தமிழகத்தில் மறைவதற்குள் மயிலாடுதுறை அருகே குளத்தில் தவறி விழுந்து மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் சிறுவனின் தந்தையும் தற்கொலைசெய்த சம்பவம் நடந்துள்ளது.

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியைச் சேர்ந்தவர் வினோத் (40). இவருக்கு சாரதா என்ற மனைவியும், சாலமன், சாம்சன், ஷாலினி ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்று வினோத் வீட்டில் இருந்த நேரத்தில் வினோத்தின் இரண்டாவது மகன் சாம்சன் நாகங்குடி கிராமத்தில் உள்ள தண்ணீர்பாய்ந்தான் குளத்திற்கு தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றுள்ளார்.

பொழுது சாய்ந்ததால் அப்பகுதியினர் சிறுவர்களை வீட்டுக்குச் செல்லச்சொல்லி விரட்டியுள்ளனர். சாம்சனின் சக நண்பர்கள் ஓடிவிட சாம்சன் மட்டும் குளக்கரையில் பதுங்கி இருந்துள்ளார். சிறிதுநேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்ட சாம்சன் குளத்தில் தவறி விழுந்துள்ளார். இரவு 7 மணியைக் கடந்தும் மகனைக் காணாததால் விசாரித்துப் பார்த்ததில் சாம்சன் குளத்திற்கு சென்றது தெரியவந்தது இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் அங்கு சென்று தேடியுள்ளனர்.

ஆனால் சிறுவன் கிடைக்காததால் சந்தேகத்தின்பேரில் மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான வீரர்கள் குளத்தில் இறங்கி தேடியதில் ஒருமணி நேரத்துக்குப் பின் சிறுவன் சாம்சன் சடலத்தை மீட்டனர். அவரது உடலை போலீஸார் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மகன் உயிரிழந்துவிட்டான் என்ற செய்தி கேட்டதும் துக்கம் தாங்காத அவரது தந்தை வினோத் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, வினோத்தின் உடலையும் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மயிலாடுதுறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வீட்டில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

_சக்தி பரமசிவன்

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

திங்கள் 15 மா 2021