மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

ஹீரோவாக மாறிய இன்ஸ்பெக்டர்!

ஹீரோவாக மாறிய இன்ஸ்பெக்டர்!

அடையாறு ஆற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை, தன் உயிரை பொருட்படுத்தாமல் ஆற்றில் இறங்கி காப்பாற்றிய இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் சைதாப்பேட்டை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் ரவுடிகளை பிடிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பனகல்‌ மாளிகை பகுதிவழியாக செல்லும்‌ அடையாற்றின்‌ பாலத்தின்‌ கீழ் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிக்கி கொண்டிருந்ததை கவனித்த இன்ஸ்பெக்டர் உடனடியாக ஆற்றில் இறங்கி அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் புகழேந்தி கூறுகையில், ”ரவுடிகளை துரத்தி கொண்டிருந்தபோது, ஆற்றில் ஒரு பெண் தத்தளித்து கொண்டிருந்ததை பார்த்தேன். அந்தப் பெண்ணை பார்த்து சத்தமிட்டேன், ஆனால், அந்த பெண்ணிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அந்த பெண்ணை காப்பாற்ற உடனடியாக ஆற்றில் இறங்கினேன். அப்போது சேற்றில் என்னுடைய ஷூ மாட்டிக்கொண்டது. இதையடுத்து, என் குழுவினரின் உதவியுடன் ஆஸ்பெட்டாஸ் ஓடுகள், மரக்கட்டைகளை சகதியில் போட்டு, அதில் நடந்து சென்று அந்த பெண்ணுக்கு கை நீட்டினேன். உடனே என் கையை பிடித்து கொண்டார் அந்த பெண். அப்போதுதான் தெரிந்தது, அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. யாராவது தனக்கு உதவி செய்வார்களா என்று எதிர்பார்த்து கொண்டு இருந்திருக்கிறார். என் குழுவினரின் உயிரை பணயம் வைக்க விரும்பாததால், நானே ஆற்றில் இறங்கினேன்” என தெரிவித்தார்.

அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தான் அமாவாசைக்காக கோயிலுக்கு வந்தபோது வழி தப்பி இங்கே வந்துவிட்டதாகவும், கிண்டி நாகிரெட்டி தோட்டம் பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்தது. இதனையடுத்து அவரின் மகன் ஆனந்தன் என்பவரிடம் காவல்துறையினர் அந்த பெண்ணை ஒப்படைத்துள்ளனர். சிறிது நேரத்திலே ஐந்து ரவுடிகளையும் போலீசார் கைதுசெய்தனர்.

தீயணைப்பு படையினர் வரும்வரைக்கு காத்திருக்காமல், தன் உயிரை பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து பெண்ணை காப்பாற்றியதற்காக இன்ஸ்பெக்டர் புகழேந்தியை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், துணை கமிஷனர் விக்ரமன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 15 மா 2021