மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

ஒரு லிட்டர் வெந்நீர் ரூ.20!

ஒரு லிட்டர் வெந்நீர் ரூ.20!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக மயிலாடுதுறையில் டீக்கடை ஒன்றில் ஒரு லிட்டர் வெந்நீர் 20 ரூபாய் என்று பலகை வைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை மூன்று மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 125 ரூபாய் அதிகரித்துள்ளது. இதை எதிர்த்து பல்வேறு தரப்புகளிலிருந்து போராட்டம் நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கேட்டு எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கல கடைவீதியில் டீக்கடை ஒன்றில், வைக்கப்பட்டிருந்த பலகையில், கேஸ் விலை உயர்வு காரணமாக 1/2 லிட்டர் வெந்நீர் ரூ.10-க்கும், 1 லிட்டர் வெந்நீர் ரூ.20-க்கும் விற்கப்படுகிறது. வெந்நீர் இலவசம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து அந்த டீக்கடைக்காரர் கூறுகையில், 2014 ஆம் ஆண்டு ரூ.1050க்கு விற்கப்பட்டு வந்த 19 கிலோ எடைகொண்ட கமர்சியல் கேஸ் சிலிண்டர், தற்போது ரூ.1800 க்கு விற்கப்படுகிறது. கேஸ் விலை உயர்வு காரணமாக வெந்நீரை கூட விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 15 மா 2021