ரிலாக்ஸ் டைம்: சோள வடை!


வீட்டிலுள்ளவர்களுக்கு ரிலாக்ஸ் டைமில் என்ன செய்து கொடுக்கலாம் என்பது நிறைய இல்லத்தரசிகளின் நாள்தவறாத கேள்வியாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த சோள வடையைச் செய்து கொடுக்கலாம்.
எப்படிச் செய்வது?
ஒரு கப் சோளத்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து வைக்கவும். ஒரு கைப்பிடி அளவு (சோயா சங்ஸ்) மீல் மேக்கரை வெந்நீரில் 3-4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டவும். பின் குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும். சோளம், மீல் மேக்கர் இரண்டையும் தனித்தனியே நீர்விடாமல் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த சோளம், மீல் மேக்கர், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு ஒன்று, சீரகம் ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இரண்டு, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் (விருப்பப்பட்டால்) சிறிதளவு சேர்த்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு
வெங்காயத்துக்குப் பதிலாக முட்டைக்கோஸைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தும் செய்யலாம்.
சிறப்பு