மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

எஸ்.பி கண்ணனுக்கு மீண்டும் சம்மன்!

எஸ்.பி கண்ணனுக்கு மீண்டும் சம்மன்!

பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்கவிடாமல் தடுத்த எஸ்.பி கண்ணன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாததால், மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது சிபிசிஐடி.

தமிழக சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்த விவகாரத்தில், சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்கவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பெண் எஸ்.பி அதிகாரியை தடுத்தபோது உடனிருந்த காவலர்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் எஸ்.பி கண்ணனையும் விசாரிக்க சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. குற்றம்சாட்டப்பட்ட டிஜிபி அந்தஸ்து ஐபிஎஸ் அதிகாரி விசாரணைக்கு ஆஜரான நிலையில், அந்த விசாரணைக்கு எஸ்.பி கண்ணன் ஆஜராகவில்லை. இந்த வழக்கு குறித்த அறிக்கையை சிபிசிஐடி வரும் 16ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதால் எஸ்.பி கண்ணனை விசாரணைக்கு ஆஜராக்கக்கோரி சிபிசிஐடி மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 15 மா 2021