கிச்சன் கீர்த்தனா: புடலங்காய் – தேங்காய்ப்பால் கூட்டு!

public

சுவைமிக்க பிரியாணியாக இருந்தாலும் அதற்கு சைடிஷாக வெங்காயப் பச்சடி தேவைப்படுகிறது. அதேபோல பரோட்டாவுக்குக் குருமா, சப்பாத்திக்கு தால், இடியாப்பத்துக்குத் தேங்காய்ப்பால், சாம்பாருக்கு வறுவல், மோர் சாதத்துக்கு மிளகாய் வற்றல் என்று குறிப்பிட்ட காம்பினேஷனுடன் சாப்பிட்டுப் பழகிவிட்டோம் நாம். அந்த வகையில் இந்தப் புடலங்காய் – தேங்காய்ப்பால் கூட்டு காரக் குழம்புக்குப் சரியான காம்பினேஷனாக அமையும்.

**என்ன தேவை?**

புடலங்காய் – ஒன்று (தோல் சீவி, விதை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்)

தோலுரித்த சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கவும்)

முதல் தேங்காய்ப்பால் – ஒரு கப்

இரண்டாவது தேங்காய்ப்பால் – ஒன்றரை கப்

கறிவேப்பிலை – சிறிதளவு

சீரகம் – அரை டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

சிறிய பச்சை மிளகாய் – ஒன்று (இரண்டாகக் கீறவும்)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டீஸ்பூன்

**எப்படிச் செய்வது?**

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், புடலங்காய் துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இரண்டாவது தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து மூடி வேகவிடவும். காய் நன்கு வெந்த பிறகு முதல் தேங்காய்ப்பாலை ஊற்றிக் கொதிக்கவிடவும். தேங்காய்ப்பால் வற்றியதும் இறக்கவும்.

**[நேற்றைய ஸ்பெஷல்: புரொக்கோலி சமையல்!](https://www.minnambalam.com/public/2021/03/14/1/kitchen-keerthana-%20Broccoli-samayal)**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *