மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

மணப்பெண் தேவை: போலீஸாரிடம் இரண்டடி வாலிபர் கோரிக்கை!

மணப்பெண் தேவை: போலீஸாரிடம்  இரண்டடி வாலிபர் கோரிக்கை!

தனக்குத் தகுதியான மணப்பெண்ணைத் தேடித்தரும்படி போலீஸாரிடம் மனு அளித்துள்ளார் இரண்டடி உயர வாலிபர் ஒருவர்.

உத்தரப்பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கைரானா என்ற ஊரைச்சேர்ந்தவர் 26 வயது ஹசீம் மன்சூரி . இவர் இரண்டு அடி உயரமே உள்ளதால், யாரும் இவரை திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை. உயரம் குறைவாக இருப்பதால் சிறுவயது முதல் பல அவமானங்களை இவர் சந்தித்துள்ளார். தன்னோடு படித்தவர்கள் கேலி செய்ததால் ஐந்தாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, சகோதரரின் அழகுசாதன பொருட்கள் விற்பனையகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

ஹசீம் மன்சூரிக்கு 21 வயதாக இருக்கும்போதே, அவரின் வீட்டார் அவருக்கு பெண் தேடத்தொடங்கினர். ஆனால் இதுவரை அவருக்கு திருமணமாகவில்லை. இதனால் மனவேதனையடைந்த ஹசீம் மன்சூரி உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவை சந்தித்து தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், தற்போதைய முதல்வரான யோகி ஆதித்யநாத்துக்கும் கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆண்டு, போலீஸாரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் போலீஸாரைச் சந்தித்து தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி மீண்டும் கூறியுள்ளார். மேலும் இது மக்கள் சேவையில் வரும் என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

ஞாயிறு 14 மா 2021