மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

பறக்கும் படை சோதனை: ரூ.100 கோடியை எட்டியது!

பறக்கும் படை சோதனை: ரூ.100 கோடியை எட்டியது!

தமிழகம் முழுவதும் இதுவரை பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.100 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பணம் எடுத்துச் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும், வாக்காளர்களுக்குப் பணம், பொருள்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுப்பதற்காக பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நேற்று (மார்ச் 13) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பணப்பட்டுவாடாவைத் தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 99.68 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதில், 40 கோடி ரூபாய் ரொக்க பணம், 51 லட்சம் மதிப்புள்ள 23,000 லிட்டர் மதுபானம், 57 கோடி ரூபாய் மதிப்புள்ள 272 கிலோ தங்கம், ஒரு கோடி மதிப்பில் 182 கிலோ வெள்ளி ஆக மொத்தமாக 99.68 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், மாவட்ட சிறப்புத் தேர்தல் பார்வையாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் செலவினங்களை எவ்வாறு கண்காணிப்பது, பணப்பட்டுவாடாவை எவ்வாறு தடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். மேலும் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனையைத் தடுப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

வினிதா

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

ஞாயிறு 14 மா 2021