மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

காமராஜர் நீர் தேக்கத்தில் மூழ்கி 5 பேர் பலி!

காமராஜர் நீர் தேக்கத்தில் மூழ்கி 5 பேர் பலி!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கத்தில் சிறுவர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வபரணி(19), லோகநாதன்(19), கார்த்திகை பிரபாகரன்(19), நாகராஜ்(19), பரத்(16) ஆகிய ஐந்து பேரும் இன்று(மார்ச் 14) மாலை ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஐந்து பேரும் ஆழமான பகுதிக்கு சென்று , நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அரைமணி நேர போராட்டத்துக்கு பிறகு 5 பேரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக ஐந்து பேரின் உடல்களும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த செல்வபரணி, லோகநாதன், நாகராஜ் ஆகிய மூவரும் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்ததாகவும், பரத் அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும், கார்த்திகை பிரபாகரன் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 14 மா 2021