மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

ரிலாக்ஸ் டைம்: நவதானியக் கஞ்சி!

ரிலாக்ஸ் டைம்: நவதானியக் கஞ்சி!

நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் நவதானிய மாவு கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கிறது அல்லது நாமே நவதானியங்களைச் சரிசம அளவு வாங்கி தனித்தனியே வாணலியில் சிவக்க, மணக்க வறுத்து மாவு மெஷினில் கொடுத்து அரைத்துவைத்துப் பயன்படுத்தலாம். ரிலாக்ஸ் டைமில் இந்த நவதானியக் கஞ்சி அருந்துவது புத்துணர்ச்சியைத் தரும்.

எப்படிச் செய்வது?

அரை கப் நவதானிய மாவுடன் தேவையான நீர்விட்டு கரைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் ஊற்றி நன்கு கிண்டவும். மாவு வெந்ததும் அடுப்பை அணைக்கவும். இதனுடன் இரண்டு கப் காய்ச்சிய பால், ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, இரண்டு டேபிள்ஸ்பூன் வறுத்த முந்திரிப்பருப்பு தூவி, இரண்டு டேபிள்ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கலந்து பருகவும்.

சிறப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 14 மா 2021