மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

ஆகஸ்ட் 1இல் நீட் தேர்வு!

ஆகஸ்ட் 1இல் நீட் தேர்வு!

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் என்னும் பொது நுழைவுத் தேர்வு 2013ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

வழக்கமாக மே மாதத்தில் நடைபெற்று வந்த நீட் தேர்வு தற்போது கொரோனா தொற்று காரணமாக ஆகஸ்ட் 1ஆம் தேதியில் நடைபெறுகிறது. நீட் நுழைவுத்தேர்வு ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் ஒரே கட்டமாக நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வில் வழக்கமாக நீட் தேர்வுக்குக் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்படும். மேலும் இந்த தேர்வு குறித்து தெரிந்து கொள்ள https://nta.ac.in அல்லது https://ntanett.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டைப் போல, இந்தாண்டும் கோவிட்-19 வழிகாட்டுதல்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படும். கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் ஒரு அறையில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடைபெறும் என்றும், 2021ஆம் ஆண்டு முதல் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சையின்ஸ் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வை கடந்த ஆண்டு சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். அதில் 7,71,500 மாணவர்கள் தேர்வுக்குத் தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 13 மா 2021