மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

சென்ட்ரல் அடையார் ஆனந்த பவனுக்கு சீல்!

சென்ட்ரல் அடையார் ஆனந்த பவனுக்கு சீல்!

சென்னை சென்ட்ரல் (புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன்) ரயில் நிலையத்தில் உள்ள அடையார் ஆனந்த பவன் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தளர்வுகளுக்குப் பின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு 50க்கும் மேற்பட்ட ரயில்கள் தினசரி இயக்கப்படுகிறது. 50,000க்கும் மேலான பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர்.

இங்கு பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு பல உணவகங்கள் உள்ளன. அவற்றில் அடையார் ஆனந்த பவனும் ஒன்று. அந்த ஹோட்டலில் பணிபுரியும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது ஊழியர் ஒருவருக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல், சளி, இருமல் இருந்ததையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்தச் சோதனையின் முடிவு நேற்று முன்தினம் வந்தது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த ஹோட்டலில் இருந்து மற்ற ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்குத் தொற்று பரவுவதைத் தடுக்க, அந்த ஹோட்டலை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.

மேலும், கடையில் உள்ள அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன்படி அனைத்து ஊழியர்களும் கொரோனா சோதனை செய்துள்ளனர். பரிசோதனை முடிவுக்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், மற்றொரு கடையில் பணிபுரிந்த ஊழியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

சனி 13 மா 2021