மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

கல்லீரல் தானம்: தினமும் 12 மாடிகள் ஏறி இறங்கி எடையைக் குறைத்த மனைவி!

கல்லீரல் தானம்: தினமும் 12 மாடிகள் ஏறி இறங்கி எடையைக் குறைத்த மனைவி!

மகாராஷ்டிராவில் தன் கணவருக்கு கல்லீரல் தானம் வழங்குவதற்காக உடல் எடையைக் குறைக்க நினைத்த மனைவி அந்த மருத்துவமனையின் 12ஆவது மாடிக்கு தினமும் படிகளின் வழியாகவே ஏறி, இறங்கிய நிகழ்ச்சி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரில் மதுபானக்கடை வைத்திருப்பவர் 51 வயது விவேக் ஜெயின். மது பழக்கத்துக்கு அடிமையான அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. கல்லீரல் தானம் செய்ய யாரும் முன்வரவில்லை. இந்தச் சூழ்நிலையில் விவேக் ஜெயினின் 46 வயது மனைவி நீது ஜெயினுக்கு ஒரே ரத்த வகை இருந்ததால், கணவருக்கு நீது கல்லீரல் தானம் செய்ய முடிவு செய்தார். ஆனால், அதிலும் ஒரு பிரச்சினை இருந்தது. நீது அளவுக்கு அதிகமான 97 கிலோ எடையுடன் இருந்தார்.

எடையைக் குறைத்தால் மட்டுமே ஆபரேஷன் செய்ய முடியும் என்று டாக்டர்கள் கூறினர். எனவே நீது, எடை குறைப்புக்காகத் தனது வாழ்க்கை முறையை மாற்ற ஆரம்பித்தார். நாக்பூரில் இருந்து மும்பை பரேலில் வந்து தங்கினார். பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் விவேக் ஜெயின் சேர்க்கப்பட்டார்.

உடல் எடையைக் குறைக்க வேண்டி அந்த மருத்துவமனையின் 12ஆவது மாடிக்கு நீது தினமும் படிகளின் வழியாகவே ஏறி, இறங்கினார். அதோடு தனக்குப் பிடித்தமான உணவு வகைகளான இனிப்பு, ஆயில் வகைகளைத் தன் கணவருக்காகத் துறந்து, கடினமான டயட்டையும் பின்பற்றினார்.

வீட்டிலும் 6ஆவது மாடிக்குத் தினமும் படிக்கட்டுகளில் நடந்தே சென்றார். இந்தப் பயிற்சிகள் எல்லாம் நீதுவை உச்சக்கட்ட சோர்வில் தள்ளினாலும், தன் கணவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.

இந்த முயற்சியால் 10 கிலோ அளவுக்கு எடை குறைந்தார் நீது. இதையடுத்து அவரின் கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து அவர் கணவருக்கு வைத்து ஆபரேஷன் செய்யப்பட்டது. இப்போது விவேக் ஜெயின் நலமுடன் இருக்கிறார்.

இதுகுறித்து பேசியுள்ள விவேக் ஜெயின், “நான் இன்று உயிருடன் இருக்கிறேன் என்றால் அதற்கு என் மனைவிதான் முழுக்கக் காரணம். இது எனக்கு மறு பிறவி. மதுவை விடுத்து புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்புகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 13 மா 2021