மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

சிவகாசியில் மீண்டும் வெடி விபத்து!

சிவகாசியில் மீண்டும் வெடி விபத்து!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று இடங்களில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில், காளையார்குறிச்சியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேரும், அச்சன்குளத்தில் ஏற்பட்ட விபத்தில் 25 பேரும் உயிரிழந்தனர். அதிகளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய அச்சன்குளம் வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்பேரில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு மேற்கொண்டு, விதிமீறல் இருந்த 13 ஆலைகளுக்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில், சிவகாசி அருகே இன்று மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கம்பி மத்தாப்பு தயாரிக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

சனி 13 மா 2021