மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

ஸ்ரீரங்கம் கோயில் விழாக்களை நடத்த முடிவு!

ஸ்ரீரங்கம் கோயில் விழாக்களை நடத்த முடிவு!

கொரோனா ஊரடங்கு காரணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட ஐந்து திருவிழாக்களை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடுத்திருந்தார். அதில், கொரோனா தொற்று காரணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மூடப்பட்டதையடுத்து, கோயிலில் நடைபெறும் பண்டிகைகள், பூஜைகள், திருவிழாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதனால், மீண்டும் விழாக்களை நடத்துவது குறித்து, மத தலைவர்கள் குழு அமைத்து முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோயிலில் நடக்கவுள்ள விழாக்கள், பண்டிகைகளை எப்படி நடத்துவது என்பது குறித்து, மத தலைவர்களுடன் கூட்டம் நடத்தி எடுக்கப்பட்ட முடிவை அறிக்கையாக அளிக்க உத்தரவிட்டனர்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த முறை நடந்தபோது, கூட்டம் நடத்தபடாமல் இருந்ததற்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், உடனடியாக கூட்டத்தை கூட்டி முடிவெத்து,அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி கூட்டப்பட்ட மத தலைவர்கள் கூட்டத்தில், நிறுத்தப்பட்ட ஐந்து விழாக்களை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைய துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், விழாக்களை கோயில் மரபுகளின்படியும், ஆகம விதிகளின்படியும் விரைந்து நடத்த கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

சனி 13 மா 2021