மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

வாக்குப்பதிவு நேரம் தெரியாத அலுவலர்கள்!

வாக்குப்பதிவு நேரம் தெரியாத அலுவலர்கள்!

தேர்தல் நடைமுறைகள் குறித்து முறையாக தெரிந்து கொள்ளுங்கள், அலட்சியமாக இருக்காதீர்கள் என தேர்தல் அலுவலர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வாக்குப் பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மானாமதுரை பெண்கள் மேல்நிலைபள்ளியில் தேர்தல் அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் உதவி தேர்தல் அலுவலர் தனலெட்சுமி தலைமையில் நடத்தப்பட்டது. அதில், வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள், அதில் பழுதுகள் ஏற்பட்டால் எவ்வாறு சரிசெய்ய வேண்டும், வாக்குப்பதிவின்போது அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்னென்ன உள்ளிட்டவை குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான மதுசூதன் ரெட்டி பயிற்சி முகாமை பார்வையிட்டார். அப்போது, பயிற்சியில் கலந்து கொண்ட அலுவலர்களிடம் வாக்குப்பதிவு நேரம் என்ன என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை என பதில் அளித்துள்ளனர்.

அலுவலர்களின் பதிலால் கோபமடைந்த ஆட்சியர், கொரோனா தொற்று காரணமாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு, காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகளை முறையாக அறிந்து கொள்ளுங்கள், அலட்சியமாக இருக்காதீர்கள் என அலுவலர்களை ஆட்சியர் கண்டித்தார்.

வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 13 மா 2021