மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

யானை வைத்து போரடித்த பட்டதாரி!

யானை வைத்து போரடித்த பட்டதாரி!

நாடும் மக்களும் 21ஆம் நூற்றாண்டில் பயணித்தாலும் பழமை எங்காவது பெயர் சொல்லிக் கொண்டுதான் இருக்கும்.

அந்தகாலத்தில் நெல்அறுவடை செய்து களத்தில் சிதறிபோட்டு அதன் மேல் யானைகளை சுற்றி சுற்றி நடக்கச்செய்து கதிரில் உள்ள நெல்லை உதிர்த்து ஆள்வைத்து காற்றில் தூவி சுத்தமாக்கி நெல் மூடைகளில் மூட்டி வைப்பார்கள். பின்னாளில் யானைக்கு பதில் மாடுகள் பயன்படுத்தி பின் டிராக்டர் பயன்படுத்தி இப்போது அறுவடை இயந்திரம் மூலம் ஒரு ஏக்கர் நெல் ஒருமணிநேரத்தில் ரெடியாகி விடுகிறது.

இந்தநவீன இயந்திரகாலத்தில் மீண்டும் யானை வைத்து போரடித்தார் ஒரு பொறியல் பட்டதாரி விவசாயி.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே புலிப்பட்டியை சேர்ந்தவர் மதன் பாபு (26). பி.டெக் பட்டதாரி. சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர், விவசாய ஆர்வத்தில் வேலையை ராஜினாமா செய்தார். மதுரை மேலமாசி வீதியில், இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறார். இவர் அரசு அனுமதியுடன் சுமதி என்ற 40 வயது பெண் யானையை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார்.

திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த யானையை வாடகைக்கு விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் அன்மையில் தனது வயலில் அறுவடை செய்த நெல்லை, யானையை வைத்து போரடித்து, அதை வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ காட்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. மாடு கட்டி போர் அடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போர் அடித்தது பழந்தமிழர் வரலாறு என கூறுவதுண்டு.

அதை மெய்ப்பிக்கும் விதமாக இந்த காட்சி உள்ளதாக பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மதன்பாபு கூறுகையில், ‘‘4 தலைமுறையாக யானை வளர்க்கிறோம். தாயும் விவசாயிதான். ஆகையால் எனக்கும் விவசாயம் மீது ஆர்வம் ஏற்பட்டது. மாட்டின் சாணம், யானையின் சாணம் ஆகியவற்றை உரமாக பயன்படுத்தி, இயற்கை விவசாயமும் செய்து வருகிறோம். டிராக்டர் வைத்து போர் அடிக்கிறோமே, யானையை வைத்து அடித்தால் என்னவென்று தோன்றியது. எங்களது 13 ஏக்கர் விவசாய நிலத்தில், 5 ஏக்கர் நெல் பயிரிட்டுள்ளோம். அந்த 5 ஏக்கரில் விளைந்த நெல்லை, ஒரே நாளில் யானையை வைத்து போர் அடித்து நெல்லாக்கினோம் என்றார்.

-சக்தி பரமசிவன்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

சனி 13 மா 2021