மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

சொட்டு மருந்து: இளைஞரின் விழிப்புணர்வு!

சொட்டு மருந்து: இளைஞரின் விழிப்புணர்வு!

சென்னை கொரட்டூர் ரோட்டரி சங்கத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார் (29). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் போலியோ சொட்டு மருந்து அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக 3232 கி. மீ., சைக்கிள் பயணத்தை சென்னையில் தொடங்கி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக மீண்டும் சென்னை திரும்புகிறார். வழியில் நேற்று (மார்ச் 12) ராஜபாளையம் விருதுநகர் வந்த இவருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

சைக்கிளில் செல்லும் இவர், ஆங்காங்கே கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே போலியோ நோய் ஒழிப்பு அவசியம் பற்றி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறார்.

-சக்தி பரமசிவன்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 13 மா 2021