மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்!

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்!

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப் 6இல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தத்தில் புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் (படிவம்-6) தனிப்பட்ட தொலைபேசி எண் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை (e-EPIC) NVSP (https://www.nvsp.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2021ன் போது, புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்போன் எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்துகொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி இன்றும் , நாளையும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் தலைமைதேர்தல் ஆணையகத்தால அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதன்படி சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2021ன் போது வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் இந்த முகாமினைப் பயன்படுத்தி தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை தங்களது செல்போன்/ கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. எனவே பயனாளிகள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்.

_சக்தி பரமசிவன்

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

சனி 13 மா 2021