மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

உரிமை கோரப்படாத உடல்கள் : நீதிமன்றம் கேள்வி!

உரிமை கோரப்படாத உடல்கள் : நீதிமன்றம் கேள்வி!

உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பது குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்கள் மயானங்களில் புதைக்கப்படுவதால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையிலே உடல்களை வைத்திருப்பதால் நோய் பரவும் அபாயம் இருப்பதால், அந்த மாதிரியான உடல்களை தகனம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று(மார்ச் 13) மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு நடந்தது. அப்போது, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதையும், அது தொடர்பான விதிகளையும் அறிக்கையில் சேர்த்து மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர்.

வினிதா

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

சனி 13 மா 2021