மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

வெறிச்சோடிய தேர்தல் அலுவலகங்கள்!

வெறிச்சோடிய தேர்தல் அலுவலகங்கள்!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் செய்யும் பணி நேற்று தொடங்கியது. சில தொகுதிகளில் வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வந்து தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில், நேற்று சில தேர்தல் அலுவலகங்கள் வெறிச்சோடியும் கிடந்துள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களில் வேட்புமனுக்களை பெற அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயாராக இருந்தனர். ஆனால், வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான நேற்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதியில் ஒருவர் கூட வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.

விருதுநகர், சிவகாசி, சாத்தூர்,ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளிலும் நேற்று ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

தூத்துக்குடி, திருச்செந்தூர், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் , தென்காசி ஆகிய தொகுதிகளிலும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை. அதுபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

புதுச்சேரியிலும், 30 தொகுதிகளில் ஒருவர் கூட நேற்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இன்றைய தினம் அமாவாசை என்பதால், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இன்னும் சில கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எப்படி இருப்பினும்,வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான நேற்று பொதுவாக அனைத்து இடங்களிலும் மந்தமாகதான் இருந்தது. இன்றும் நாளையும் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது என்பதால், திங்கள் கிழமைதான் வேட்பு மனு தாக்கல் பணி சூடு பிடித்து விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

சனி 13 மா 2021