மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

லஞ்சம்: நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் கைது!

லஞ்சம்: நகர ஊரமைப்பு  உதவி இயக்குநர் கைது!

தஞ்சாவூரில் நகர ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநருக்குச் சொந்தமான இடங்களில் 4.19 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநர் வீடுகள், வங்கிக் கணக்குகளில் ஊழல் தடுப்புக் காவல் பிரிவினர் நேற்று (மார்ச் 12) நடத்திய தொடர் சோதனையில் 4.19 கோடி மதிப்பிலான நகைகள், ரொக்க பணம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர் விக்னேஷ் நகரைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன் (52). இவர் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை கல்லுக்குளம் பகுதியிலுள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநராக உள்ளார். ஆதாயம், பணபலன் இல்லாமல் எந்த ஒரு நேர்மையான வேலையைகூட செய்துதர மறுக்கும் இவர் கடந்த பிப்ரவரி 25 அன்று வணிக வளாகம் கட்டுவதற்குக் கட்டடத் திட்ட அனுமதி பெற வந்த நபர் ஒருவரிடம் ரூ. 25,000 லஞ்சம் வாங்கியுள்ளார்

இதை மறைந்திருந்து கண்காணித்த தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புக் காவல் அலுவலர்கள் நாகேசுவரனைக் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, திருச்சியிலுள்ள நாகேஸ்வரனின் 3 வீடுகள், 3 வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்கள், அவரது பெயரிலும், அவரது மனைவி, மகன், மகள் பெயர்களிலும் உள்ள 9 வங்கிக் கணக்குகள், நிரந்தர வைப்புகள் ஆகியவற்றை ஊழல் தடுப்புக் காவல் பிரிவினர் தொடர்ந்து சோதனையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில், 3 வீடுகளிலிருந்து ரூ.14.10 லட்சம் ரொக்கமும், 3 வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்களிலிருந்து ரூ. 2.12 கோடி ரொக்கமும், வங்கிச் சேமிப்புக் கணக்குகளில் ரூ. 1.12 கோடியும், நிரந்தர வைப்புகளில் ரூ. 23.59 லட்சமும், வீடுகள், வங்கிகளில் 1.38 கிலோ தங்க நகைகளும் இருப்பது தெரிய வந்தது. இதில், தங்க நகைகளின் இன்றைய மதிப்பு ரூ. 58.09 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மொத்தத்தில் சுமார் ரூ. 4.19 கோடி மதிப்பிலான நகைகள், ரொக்கத்தை ஊழல் தடுப்புக் காவல் பிரிவினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லாவற்றையும் கணக்கு பார்த்துச் சரிசெய்வதற்குள் தலைசுற்றிப்போனார்களாம் அதிகாரிகள்.

சக்தி பரமசிவன்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 13 மா 2021