மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

ரிலாக்ஸ் டைம்: ஆலு - பனீர் - பாலக் ஃபிங்கர்ஸ்!

ரிலாக்ஸ் டைம்: ஆலு - பனீர் - பாலக் ஃபிங்கர்ஸ்!

கடையில் சரம் சரமாகக் காட்சியளிக்கும் பாக்கெட்டில் அடைத்துவைத்த நொறுக்குத்தீனிகளைக் குழந்தைகள் கேட்கிறதே என்று வாங்கிக்கொடுக்காமல், வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய இந்த ஆலு - பனீர் - பாலக் ஃபிங்கர்ஸ் செய்து ரிலாக்ஸ் டைமில் கொடுங்கள். அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

எப்படிச் செய்வது?

இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகத்தைச் சேர்த்து விழுதாக அரைக்கவும். நான்கு உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைக்கவும். ஒரு கப் பனீரை உதிர்த்து வைக்கவும். அகலமான பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, உதிர்த்த பனீர், பொடியாக நறுக்கிய பாலக்கீரை ஒரு கைப்பிடி அளவு, ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, தலா ஒரு கப் அரிசி மாவு, கார்ன் ஃப்ளார், அரைத்து வைத்த மிளகாய் விழுது, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டுப் பிசைந்து, ஃபிங்கர் வடிவத்தில் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சீரகம் சேர்க்காமலும் செய்யலாம். பாலக்கீரைக்குப் பதிலாக வெந்தயக் கீரையைச் சேர்த்தும் செய்யலாம்.

சிறப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

சனி 13 மா 2021