மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

சோதனையை தீவிரப்படுத்த ஆலோசனை!

சோதனையை தீவிரப்படுத்த ஆலோசனை!

தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும், அடுத்தக்கட்ட நகர்வு குறித்தும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தேர்தல் செலவின மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட சிறப்பு செலவின பார்வையாளர்களான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான மதுமகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழகம் வந்து தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வுசெய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று சிறப்பு பொதுப் பார்வையாளர் அலோக் வர்தன், சிறப்பு காவல் பார்வையாளர் தர்மேந்திர குமார் ஆகியோர் சென்னை வந்தனர்.

இதையடுத்து, நேற்று மாலை சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள், பொது பார்வையாளர்கள் ஆகியோர் சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் கண்காணிப்பு அதிகாரிகள், மாவட்ட வருமான வரி துறை தேர்தல் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டதால், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் செலவு விவரங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பறக்கும் படை, வருமான வரி துறை சோதனையை இன்னும் அதிகரிக்க வேண்டும். வங்கிகளில் இருந்து அதிகளவில் பணம் எடுப்பவர்கள் பற்றி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பண பட்டுவாடா குறித்து வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, செலவினம், பொது மற்றும் காவல்துறை தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்களை, மது மகாஜன்(9444376337), பி.ஆர்.பாலகிருஷ்ணன் (9444376347), அலோக் வர்தன் (9444129844), தர்மேந்திரகுமார் (9444129822) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தேர்தல்தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வைத்து வாக்கு செலுத்தலாம். வாக்காளர் தகவல் சீட்டு, வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. வாக்காளருடைய பெயர் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் என தெரிவித்துள்ளார்.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

சனி 13 மா 2021