மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்?

ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்?

பாலியல் வழக்கில் சிக்கிய காவல்துறை உயர் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யாதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ், பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கைத் தலைமை நீதிபதி அமர்வுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரிந்துரைத்தார்.

இதனிடையே பாலியல் புகார் கொடுக்க சென்ற பெண் எஸ்பியின் காரை மறித்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராஜேஷ் தாஸுக்கு உடந்தையாகச் செயல்பட்ட எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ராஜேஷ் தாஸ் ஏன் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது.

இதனிடையே இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் எஸ்பி ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கை சிபிசிஐடியிடமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இம்மனு மார்ச் 10ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில், இவ்வழக்கில் இதுவரை 50 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று, நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கையும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தொடர்ந்த வழக்கையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கலாம் என்று தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தார்.

அதன்படி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை நியாயமாக விசாரித்துத் தீர்த்து வைக்க வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது என நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான உயர் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யாமல், அவருக்குப் பாலமாகச் செயல்பட்டவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? பெண் அதிகாரியைத் தடுத்தார் என எஸ்பியை மட்டும் சஸ்பெண்ட் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16ஆம் தேதி சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.

-பிரியா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 12 மா 2021