மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

இமையத்துக்கு சாகித்ய அகாடமி விருது!

இமையத்துக்கு சாகித்ய அகாடமி விருது!

'செல்லாத பணம்' என்ற நாவலுக்காக 2020 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார் எழுத்தாளர் இமையம்.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய படைப்புகளை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு சாகித்ய அகாடமி விருது வழங்கி வருகிறது. அதன்படி, இந்தாண்டு 20 மொழிகளில் வெளியான சிறுகதை, நாவல்,இலக்கிய விமர்சனம் உள்ளிட்ட சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமையத்திற்கு, அவரின் ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இவ்விருதை பெறுபவர்களுக்கு, தாமிர பட்டயம், மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படும்.

எழுத்தாளர் இமையம் அவர்களின் இயற்பெயர் வெ.அண்ணாமலை. இவர் 1964ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதியன்று கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கழுதூரில் பிறந்தவர். கோவேறு கழுதைகள் என்னும் நாவல்தான் இவருடைய முதல் நூலாகும். ஆறுமுகம், செடல், எங் கதெ, செல்லாத பணம் உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை முறையும், ஆதிக்க கொடுமைகளையும், மண் சார்ந்த கதைகளை யதார்த்தமாக தனது படைப்புகளில் வெளிபடுத்திருப்பார்.

இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, தமிழக அரசின் தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, பெரியார் விருது, இயல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

சாதியைக் கடந்து திருமணம் செய்துக் கொள்ளும் ஒரு பெண், அதில் ஏற்படும் சிக்கல்களில் மாட்டிக் கொண்டு எவ்வாறு தன்னைப் பலிக்கொடுக்க வேண்டியுள்ளது என்பதை செல்லாத பணம் நாவல் பேசுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு சூல் என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வெள்ளி 12 மா 2021