மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

முகக்கவசம் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை!

முகக்கவசம் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை!

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களை கண்காணிக்க பறக்கும் படை களத்தில் இறக்கப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து பேசிய அவர், ” மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500க்கு கீழ் இருந்த நிலையில், தற்போது 700ஐ நெருங்கியுள்ளது.

அதனால், முன்னெச்சரிக்கையாக நாம் செயல்பட வேண்டும். கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பதில் மக்களின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும், தாம்பரம், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கட்டாயமாக உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மட்டுமல்லாமல் குடியிருப்புப் பகுதிகள், திருமணம், இறப்பு போன்ற மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதால் கொரோனா தொற்று அதிகரிக்கிறது.

20க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. தற்போது முக்கவசம் அணியாமல் செல்பவர்களை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.

தற்போது பல கிராமங்களில் திருவிழாக்கள் நடந்து வருகிறது. நேற்று சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதுபோன்ற திருவிழாக்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அலட்சியமாக இருப்பது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும்.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 12 மா 2021